0
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் அதிகாலையில் தான் திறக்கப்படும். ஆனால் சில கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுவதில்லை. அவை எந்த கோவில்கள் என்று பார்க்கலாம்.



கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. மகாலட்சுமியை மணமுடிப்பதற்காக திருமால் வைகுண்டத்தில் இருந்து தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார்.

இங்கு உத்திராயன, தட்சிணாயன வாசல்கள் தனித்தனியாக உள்ளன. இந்த வாசல்களை கடந்து சென்றாலே பரமபதம் (மோட்சம்) கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாசன் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவியை மணமுடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக வந்ததால் இக்கோவில் பூலோக வைகுண்டமாக திகழ்கிறது.

இங்கும் வைகுண்ட ஏதாசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. தாயார் நாமம் செங்கமலதாயார். இங்கும் தட்சிணாயன, உத்தராயண வாசல் உள்ளது. திருச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.

Post a Comment

 
Top