0
உலகெங்கும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி வாட்ஸ்அப் குறுந்தகவல்களை மற்றவர்களும் பார்க்க முடியும் என கூறப்படுகிறது.



சான்பிரான்சிஸ்கோ:
வாட்ஸ்அப் செயலி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக இருக்கிறது. இதோடு முழுமையான என்க்ரிப்ஷன் வசதி கொண்ட செயலியாகவும் இது உள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்டதில் இருந்து ஃபேஸ்புக் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை படிக்க முடியும் என கூறப்படுகிறது. 

வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் பிழை ஃபேஸ்புக் மட்டுமில்லாமல் மற்றவர்களையும் வாட்ஸ்அப் குறுந்தகவல்களை படிக்க வழி செய்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பயனர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் இதன் காரணமாக அரசு நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் அனுப்பும் குறுந்தகவல்களை பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

வாட்ஸ்அப்பில் முழுமையான என்க்ரிப்ஷன் சேவை வழங்கப்பட்டதில் இருந்து சமூகத்தின் பல்வேறு பதவிகளில் இருப்பவர்களும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் சிக்னல் ப்ரோடோகால் மூலம் முழுமையான என்க்ரிப்ஷன் வசதியை வழங்குகிறது. ஓபன் விஸ்பர் சிஸ்டம்ஸ் நிறுவனம் வடிவமைத்த சிக்னல் ப்ரோடோகால் தற்சமயம் வரை பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் வாட்ஸ்அப் புதிய என்க்ரிப்ஷன் வாடிக்கையாளர்கள் ஆஃப்லைனில் இருக்கும் போதும் இயக்க வழி செய்கிறது. பொதுவாக இந்த பிரச்சனை வாடிக்கையாளர்கள் தரப்பில் அவர்களுக்கே தெரியாமல் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதாவது வாடிக்கையாளர் ஆஃப்லைனில் இருக்கும் போது சில செட்டிங்ஸ்-ஐ மாற்றுவது மற்றும் வாட்ஸ்அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யும் போதோ அல்லது புதிய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் போதோ ஏற்படுகிறது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top