0

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. சென்னை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.

வியாழக்கிழமை கோவை, கொடீசியா மைதானத்தில் பெரிய அளவில் மாணவர்கள் திரண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று சென்னை மெரீனா கடற்கரையில், மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பெரிய அளவில் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேலும், இவர்கள் கையெழுத்து இயக்கத்தையும் துவக்கியுள்ளனர்.

அதே போன்று, மதுரை தமுக்கம் பகுதியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பேரணியில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட மாணவர்கள், ”ஜல்லிக்கட்டு நடத்த முறையாக உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டோம், ஆனால் அவர்கள் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது. எங்கள் உரிமையை நாங்களே எடுத்து கொள்வோம். நிச்சயமாக தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம்” என்று கூறினார்கள்.

மேலும், திண்டுக்கல், ஈரோடு, போன்ற பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

 
Top